நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் திலகபாமா பங்கேற்ப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மதி அரங்கத்தில் வைத்து பாரதிய இலக்கியச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் எழுத்தாளர் நடராசா சுசீந்தின் எழுதிய தடங்களில் அலைதல், சொற்கள் வனையும் உலகம் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழா பாட்டாளிமக்கள் கட்சியின் மாநில பொருளாளரும், எழுத்தாளருமான கவிஞர் திலகபாமா வெளியிட அதனை எழுத்தாளர் தமிழ்செல்வன், அமிர்தம் சூர்யா, சரவண காந்த், நாடகர் முருகபூபதி, கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.மேலும் இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் உள்ளிட்ட நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், வாசகர்கள்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்
Tags : நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் திலகபாமா பங்கேற்ப்பு.