ஈபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வெற்றி பெறாது டிடிவி தினகரன்

by Staff / 27-01-2024 03:50:09pm
ஈபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வெற்றி பெறாது டிடிவி தினகரன்

திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை என அவர் கூறிள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via