இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்.12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்.

by Editor / 01-02-2024 09:15:15am
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்.12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். அந்த வகையில், பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 13, 14ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதமும் நடைபெறும். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முனைப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

 

Tags : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்.12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்.

Share via