எனது எதிரியை முடிவு செய்துவிட்டேன்.. கமல்
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் ..ம.. நீ ..கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் இன்று கட்சிக் கூட்டத்தில்பேசினார். அவர் பேசுகையில், என் எதிரி சாதியம் தான் என்பதை முடிவு செய்துவிட்டேன். சாதியம் சொல்லிக் கொடுக்க கூடியது கட்சிகளாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் இன்னும் எத்தனை சமூகங்கள் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் விவகாரம் அல்ல, ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.
Tags :