சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடி - வடமாநில கும்பல் கைது

by Staff / 29-03-2024 02:14:49pm
சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடி - வடமாநில கும்பல் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மர்ம கும்பல் சுற்றுலா பயணிகளிடம் கூப்பன்களை கொடுத்து, பரிசு விழுந்தால் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆசை காட்டுவதை அந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கான தனி இணையதளத்தை தொடங்கி, அதில் கவர்ச்சிகரமான சுற்றுலா அறிவிப்புகளையும் அந்த கும்பல் வெளியிட்டுள்ளது.இதனை நம்பி கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் இணையதளமும் முடங்கி விட்டதாக கூறப்படுகிறது. குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வட மாநிலத்தை சேர்ந்த அணில் அஜய் மேக்சா, சுருதி, சாவாஜ், ஒசாமா, ராகுல்சா, சிவா மற்றும் தீபிகா ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், லேப்டாப், பரிசு கூப்பன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo