அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

by Staff / 12-04-2024 02:46:43pm
அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில், அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தைதான் இதுவா எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அரியலூர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில் அவர்களின் பாதுகாப்பு கருது இன்று மதியத்துடன் அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories