திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Staff / 18-04-2024 02:38:49pm
திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் திமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள், வாக்குரிமையை நிலைநாட்டுவோம், மகத்தான வெற்றியை ஈட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via