கல்லூரி மாணவி தற்கொலை! காதலன் கைது

by Staff / 22-04-2024 12:58:53pm
கல்லூரி மாணவி தற்கொலை! காதலன் கைது

திருச்சி ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஶ்ரீ (18) என்ற கல்லூரி மாணவியும், கிஷோர் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் நேற்று மாடியிலிருந்து கீழே குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்தார். இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயஸ்ரீ வற்புறுத்தியதால் கிஷோருடன் அவருக்கு சண்டை ஏற்பட்டதையடுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கிஷோர் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories