உரிமம் இல்லாத 12 நாட்டு துப்பாக்கிகளை  வனத்துறையினரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்.

by Editor / 11-08-2024 11:19:19am
உரிமம் இல்லாத 12 நாட்டு துப்பாக்கிகளை  வனத்துறையினரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையை ஒட்டிய கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கள் விளை நிலத்துக்குள் வனவிலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க ஆங்காங்கே கிராம மக்கள் கள்ளத் துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதனால் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் பென்னாகரம், ஏரியூர் வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன அலுவலர்கள் பொதுமக்களிடம் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல்  நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியப்படாது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பென்னாகரம் வட்டம் ஏரிமலை கிராமத்தில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வன துறையிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : உரிமம் இல்லாத 12 நாட்டு துப்பாக்கிகளை  வனத்துறையினரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்

Share via