“தம்பி விஜய்யிடம் அரசியல் பேசியது கிடையாது” - குஷ்பு

by Editor / 15-08-2024 04:52:45pm
“தம்பி விஜய்யிடம் அரசியல் பேசியது கிடையாது” - குஷ்பு

சென்னையில் இன்று பாஜக சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்றார். அவரிடம் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தம்பி விஜய் கிட்ட இதுவரை அரசியல் பேசியது கிடையாது. ரொம்ப நல்ல மனிதர். அரசியலில் எப்படி ஈடுபடுவார்? மாற்றங்கள் கொண்டு வருவாரா? என்பது எல்லாம் அவர் அரசியலில் இறங்கிய பிறகு தான் தெரியவரும். விரைவில் அவர் மாநாடு நடத்த இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

 

Tags :

Share via