‘வாழை’ படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 02-09-2024 12:21:52pm
‘வாழை’ படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ படத்தை சான் பிரான்சிஸ்கோவில் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவரது பதிவில், “பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via