அதிமுக நகர செயலாளர்வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு.

தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி இவரது வீட்டில்தான் அதிமுகவின் நகர கழக அலுவலகம் செயல்பட்டுவருகிறது.இந்தநிலையில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து சின்னமனூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். முன்விரோதம், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.இவர் ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்துஎடப்படியார் அணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்தும் விசாரணை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : அதிமுக நகர செயலாளர்வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு.