வேலைவாங்கித்தருவதாக மோசடி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த போது இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் என்பவர் வேலை வாங்கி தருவதாகவும், போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும் 27 பேர்களிடம் ஒரு கோடியே 47 லட்சம் பணம் பெற்று மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அவர் மற்றும் அவரது மனைவி மீது பாதிக்கப்பட்ட பென்மனி ஒருவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் SP அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தற்போது அந்த காவல் ஆய்வாளர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே கொடுங்குளத்தில் காமநாட்டுவிளை பகுதியை சேர்ந்த லலிதா என்பவரின் வீடு அருகே கடந்த 2022 ஆண்டில் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஏசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா ஆகியோர் வீடு வாடகைக்கு எடுத்து குடி அமர்ந்தனர் . காவல் நிலைய ஆய்வாளரும் அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நல்ல நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி என்பதால் அவர்கள் மீது மக்கள் அதிக மரியாதை வைத்திருந்தனர். நாளடைவில் அக்கம் பக்கத்தினரின் மகன், மகளுக்கு அரசு பள்ளிகளில் இளம்நிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருத்தரிடமும் இருந்து 5 லட்சம், 10 லட்சம் என 27 பேர்களிடம் இருந்து ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் பெற்று கொண்டும் சில நபர்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும் ஏமாற்றி விட்டு காவல் நிலையத்தில் பணி இடமாறுதல் பெற்று கொண்டு தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக ஏசு ராஜசேகரன் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கனக துர்கா கல்வி துறையில் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி இந்த மோசடியை செய்து உள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராக காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரனுக்கு அழைப்பானை விடுத்திருந்த நிலையில் அவர் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சாத்தான்குளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் அவரது இல்லத்திற்கு வந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தனது காரை எடுத்துக் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் ஆஜரானார். தொடர்ந்து எஸ்பி நடத்திய விசாரணையின் இறுதியில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
Tags : வேலைவாங்கித்தருவதாக மோசடி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.