சிலர் சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள் - திருமாவளவன் விமர்சனம்

by Staff / 27-02-2025 05:03:10pm
சிலர் சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள் - திருமாவளவன் விமர்சனம்

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலா, திருமஞ்சி, செண்பகம் ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "35 ஆண்டுகால உழைப்பால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறி இருக்கிறோம். சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து விட்டு, பணத்தை தேடி, சுகத்தை தேடி, சொத்தை சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

 

Tags :

Share via