இளையராஜாவை நேரில் சந்தித்த அண்ணாமலை

இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவை, பாஜக முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். கோவையில் நடந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, இசைஞானி இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானியின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
Tags :