ஆணவப்படுகொலை கடும் தண்டனை சீமான் வலியுறுத்தல்..

நெல்லையில் சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ”படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்து சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்றார்.
Tags : ஆணவப்படுகொலை கடும் தண்டனை சீமான் வலியுறுத்தல்..