பாதாள சாக்கடை அடைப்பை நீக்க முயன்ற 2 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி.

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க முயன்ற இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவெறும்பூரில் பாதாள சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய பிரபு (38) விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற ரவி (32) என்பவரும் அதே வாயுவின் தாக்கத்தால் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் மீட்ட போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags : பாதாள சாக்கடை அடைப்பை நீக்க முயன்ற 2 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி.