ஐ, டி. எப் .சி. பஸ்ட் வங்கி 590 கோடி மோசடி வழக்கில் இரண்டு ஐ..ஏ.எஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
ஐ டி எப் சி பஸ்ட் வங்கி மற்றும் அரியானா அரசு நிதிகள் சம்பந்தப்பட்ட 590 கோடி மோசடி வழக்கில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராம்குமார் சிங் 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் பஞ்சகுலா மாநகராட்சி ஆணையராகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு செயலாளராகவும் பணியாற்றியவர். பிரதீப் குமார் 2011 ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர் அரியானா போக்குவரத்து துறை இயக்குனதாக பணியாற்றியவர். ஹரியானா அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான நிதியை போலி ஆவணங்கள் மற்றும் போரின் நிறுவனங்கள் மூலம் ஐடிஎப்சி பஸ்ட் இங்கு மற்றும் ஏ யு சுமால் பைனான்ஸ் வங்கி கணக்குகளில் இருந்து மடை மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .இந்த வழக்கின் தீவிரம் கருதி மாநில ஊழல் தடுப்பு பிரிவு விசாரித்து வந்த இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைக்க சரியான அரசு கடந்த மார்ச் இறுதியில் பரிந்துரை செய்தது. அதை தொடர்ந்து சிபிஐ கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி அதிகாரபூர்வமாக எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது .இந்த மோசடியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வெளியாள்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .வங்கியின் முன்னாள் மேலாளர் ரிபவ் ரிஷி என்பவர் இந்த மோசடி செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
Tags :


















