நீட் யுஜி 2026 தேர்வுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு கால அவகாசம்
தேசிய தேர்வு முகமை ரத்து செய்யப்பட்ட நீட் யுஜி 2026 தேர்வுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு கால அவகாசத்தை 2026 ஜூன் 22 வரை நீடித்துள்ளது. இதற்கான கடைசி தேதி மே 27 ஆக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட நீட் யூஜி தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த தொகையை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார். கட்டணத்தை திரும்ப பெறுவது ஜூன் 21 அன்று நடைபெற உள்ள மறு தேர்வில் பங்கேற்பதற்கான மாணவர்களின் தகுதியை பாதிக்காது.. கட்டணத்தை திரும்ப பெற விரும்பும் மாணவர்கள் தங்களின் வங்கியை கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப எண் ரகசிய கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே செல்ல வேண்டும்.பீஸ் ரிபன்ட் என்ற இணைப்பை கிளிக் செய்து விவரங்களை பதிவிட வேண்டும்.
1) கணக்கு வைத்திருப்பவரின் பெயர் 2) வங்கி கணக்கு எண் 3) ஐ எஃப் எஸ் சி குறியீடு 4) வங்கிக் கிளையின் பெயர் ஆகியவற்றை பதிவேடு செய்து ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றலாம். தவறான வங்கி விவரங்களை அளித்தால் பணம் திரும்பப் பெறுவதில் இடர்பாடுகள் ஏற்படும். அதனால் கவனத்துடன் சரியான தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Tags :

















