சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ப்படை திட்டத் தொடக்க விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

by Admin / 29-05-2026 01:15:08am
 சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ப்படை திட்டத் தொடக்க விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றுவெள்ளிக்கிழமை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத் தொடக்க நிகழ்வு  நடைபெறுவதாக இருந்தது. அது தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.. ஏற்கனவே, மே 27 ,அன்று தொடங்கயிருந்தது.   முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றதன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.அது தற்பொழுது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொருட்டு பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட இருந்தது. இந்த சிறப்பு அதிரடி படையின் ஐ.ஜியாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அதிரடி படையில் பணியாற்றும் காவலர்களின் உடைய சீருடை சிங்க முகம் பொறிக்கப்பட்ட புதிய சின்னமும் நேவி ப்ளூ சட்டை மற்றும் காக்கி பேண்ட் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 30 வாகனங்கள் அதிரடி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo