,தமிழகத்தில் காலியாகவுள்ள ஒரு மேலவை உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
பாராளுமன்ற மேலவைக்கு காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான வேட்பு மனு விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் மயிலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதை தொடர்ந்து தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் ,தமிழகத்தில் காலியாகவுள்ள ஒரு மேலவை உறுப்பினர் பதவிக்கு 107 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தமிழக வெற்றிக்கழக சார்பாக ஒருவரை நிறுத்தி மேலவை உறுப்பினர் ஆக்கக்கூடும் என்கிற நிலையில் ,நேற்று தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் காலியாக உள்ள ஒரு பதவிக்குவேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டில் திமுக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் மீண்டும் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக ஒரு உறுப்பினருமாக இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்றுள்ளது.
Tags :



















