தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதின் காரணமாக 14 மாவட்டங்களுக்கு கனமழை

by Admin / 04-06-2026 10:16:28am
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதின் காரணமாக 14 மாவட்டங்களுக்கு கனமழை

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதின் காரணமாக 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

 மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ,தேனி, ஈரோடு ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற 14 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் வெயில் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அனல் காற்று போன்ற சூழல் நீடிக்கும் என்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பவர்கள் கூடும் எச்சரிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மலைப்பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அரபிக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

Tags :

Share via
Logo