15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்

by Admin / 14-08-2026 04:22:40pm
15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்

15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் ஐம்பதாவது சுதந்திர தின விழா மேடையில் வழங்கப்படுகின்றன.புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றிய சி  ஜெய ஸ்ரீ காவல்துறை கண்காணிப்பாளர் கும்முடிபூண்டி, நா. தமிழரசி காவல்துறை கண்காணிப்பாளர் திருவள்ளுவர் மாவட்டம், கோ. அழகுராஜ் காவல் ஆய்வாளர் சைபர் கிரைம் காவல் நிலையம் கோவை, நா .தனுசியா, துணை கண்காணிப்பாளர் குற்றப்புலனாய்வுத்துறை,திருச்சி. சே. லதா, காவல் ஆய்வாளர் ,தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, கோவை. வி, கோமதி, காவல்துறை உதவி தலைவர் நிர்வாகம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம், சென்னை., மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர், காவல் நிலையம் பெரம்பலூர்  ரா வினதா .காவல் ஆய்வாளர். மேல்மலையனூர் காவல் நிலையம்.  கோ .மகாலட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேடு கூடம், சிவகங்கை, ச. விஜயகுமார், காவல்துறை ஆணையர், திருநெல்வேலி, மேற்கு

,பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் பெறுபவர்கள் வி. சசி மோகன், காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல், தே. சண்முகப்பிரியா, காவல் கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், சென்னை, சி. எம் .ஆர். மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ,சென்னை, கா. மதன் மோகன், காவல் ஆய்வாளர், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை, மூ. ரவிக்குமார் ,தலைமை காவலர் ,கரூர் நகர காவல் நிலையம், விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

 

Tags :

Share via
Logo