இன்று முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்

by Admin / 30-10-2026 03:02:30pm
இன்று முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்

 இன்று முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜையொட்டி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்வதோடு ராமநாதபுரம் மாவட்டம் பசும் உன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலையிட்டு மலர் தூவிமரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

 முத்துராமலிங்க தேவர் குறித்து திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில்,

வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்!

 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்!

 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி!

உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி!
 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்!

“பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo