21 ஆம் நூற்றாண்டிற்கான நீண்ட நேர சந்திர கிரகணம் நவ. 19 -ல் நிகழ்கிறது - நாசா
21 ஆம் நூற்றாண்டிற்கான நீண்ட நேர சந்திர கிரகணம், வருகிற 19 ஆம் தேதி நிகழ உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியன் மற்றும் நிலவுக்கு நடுவே, பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வரவிருக்கும் நீண்ட நேர சந்திர கிரகணம், அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உள்ளவர்களுக்கு முழுமையாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி அதிகாலை 2 :19 மணி முதல் காலை 5 : 47 மணி வரை 3 மணி நேரம் 28 நிமிடம் இந்த சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.
அப்போது இதனை பைனாகுலர் இன்றி பார்க்கலாம் என நாசா கூறியுள்ளது.
இந்திய நேரப்படி பகல் 1 :30 க்கு கிரகணம் உச்சமடையும் என்றும், பூமியை சந்திரன் 97 சதவீதம் மறைப்பதால் நிலவு சிகப்பு நிறத்தில் காணப்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
Tags :