பிரசாதங்கள் வளங்கும் கவுண்டர்களின் எண்ணிக்கையை தேவசம்போர்டு அதிகரித்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் பிரசாதங்கள் வளங்கும் கவுண்டர்களின் எண்ணிக்கையை தேவசம்போர்டு அதிகரித்துள்ளது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றதால், ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்பம் மற்றும் அரவணை பாயாசம் விற்பனைக்கு மையங்களில் பக்தர்களின் கூட்டம் சாரை சாரையாக அலை மோதுகிறது.
கார்த்திகை ,மார்கழி மாதங்களில் பொதுவாக சபரிமலைக்கு ஐயப்பன் மலைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.இதன் காரணமாக பக்தர்களின் வசதிக்காக பிரசாத கவுண்டர்கள் எண்ணிக்கையை தேவசம் போர்டு அதிகரித்துள்ளது.
Tags :