தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் காமராஜர் மணிமண்டபம் திறப்பு.
ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ் மொழியில் ஒரு சில வார்த்தைகளில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததே எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.எனது சொந்த தொகுதியான வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது; இது அங்கு தமிழ் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.மிழ் மொழி, கலாசாரம் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு,குஜராத் மக்களுக்காக குஜராத்தி மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டேன்,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளையம்,காமராஜர் மணிமண்டபத்தையும் துவக்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு.
இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் 380 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை பிரதமர் மோடி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.இந்த விழாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்,சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் பங்கேற்பு.
Tags :