திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

by Admin / 02-03-2022 01:08:06pm
 திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ஈரோடு அடுத்த மூலப்பாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை செல்வராஜ், மனைவி கவிதா, மகள் மிதுன்ஷா ஆகியோருடன்  குலதெய்வம் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

மூலப்பாளையம் அடுத்த ஆணைகல்பாளையம் அருகே செல்லும்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக மூவரும் காரில் இருந்து வெளியே குதித்தனர் அப்போது கார் மளமளவென தீ பிடித்து எரிந்தது.
 
இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

Tags :

Share via

More stories