குழந்தைகளை கடத்திய ரஷியா - உக்ரைன்

by Staff / 22-03-2022 12:15:55pm
குழந்தைகளை கடத்திய ரஷியா - உக்ரைன்

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக்களை பிணயக்கைதிகளாக பிடிப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷியா கடத்தி சென்று உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுள்ளது. ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷியாவுக்கு சட்ட விரோதமாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

ரஷியாவின் படையெடுப்பில் குழந்தைகள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது போரை தொடங்குவதற்கு முன்பு ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர் வசம் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தனி சுதந்திர நகரங்களாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories