பள்ளி மாணவிகள் அட்டகாசம் வீடியோ பார்த்து திகைத்து போன பெற்றோர்கள்

by Staff / 24-03-2022 05:23:21pm
 பள்ளி மாணவிகள் அட்டகாசம் வீடியோ பார்த்து திகைத்து போன பெற்றோர்கள்

மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் மாணவிகளும் தற்போது ஆபத்தான ஸ்டண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக மாணவர் ஒருவருக்கு இணையாக மாணவி ஒருவர் ஓடிச்சென்று ரயிலில் ஏறி கால்களை உரசிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது. இதை தொடர்ந்து, அந்த மாணவி யார் என்பது அறிந்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர்களை அழைத்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இது போன்ற ஸ்டண்ட் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மாணவிகள் சிலர் பீர் குடித்து கொண்டு அதனை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டு கூச்சலிட்டு அலப்பறை செய்வதை ஒரு நபர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வைரலானது.

இதனைத் தொடர்ந்து... இந்த மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories