சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்தா?  குழுவை அமைத்தது மத்திய அரசு

by Editor / 22-05-2021 04:06:12pm
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் ரத்தா?   குழுவை அமைத்தது மத்திய அரசு

 

 

சிபிஎஸ்இ 12’ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2021’ நடத்துவது குறித்து இறுதி முடிவுக்காக லட்சம் மாணவர்கள் காத்திருக்கையில், 12 ஆம் வகுப்பு தேர்வில் முடிவெடுப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அமைச்சர்கள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மற்றும் மத்திய கல்வி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆகியோர் அடங்குவர்.

அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்களின் கருத்துக்களைக் கோரி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து அரசு ஒரு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்  நடைபெறவிருக்கும் அமைச்சர்கள் குழு மற்றும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடனான சந்திப்புக்கு தலைமை தாங்குவார். இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியல் நிஷாங்க், மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வி செயலாளர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கூட்டத்தில் சிபிஎஸ்இ மற்றும் பிற தொழில்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து மட்டுமே அமைச்சரவை குழு விவாதிக்கும் என்றும் நாளை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பிற வாரியத் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு மே 29 அல்லது 30 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் மே 4 முதல் தொடங்கவிருந்தன. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வாரியத்தால் ரத்து செய்யப்பட்டன. மேலும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via