மருத்துவர்கள் மீது தாக்குதல் பொய் வழக்குகள் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி என் ரமணா வேதனை

by Staff / 08-05-2022 01:13:56pm
மருத்துவர்கள் மீது தாக்குதல் பொய் வழக்குகள் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி என் ரமணா வேதனை

மருத்துவர்கள் மீதான வன்முறை சம்பவங்களை கண்டு வேதனைப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் ரமணா வேதனை தெரிவித்துள்ளார்  ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் நண்பர்கள் என்றும் அவர்கள் சமூகத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை தீர்க்கும் பணியை தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படும் கண்டு வேதனைப்படுவதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்ற அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

Tags :

Share via

More stories