சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

by Editor / 09-07-2022 05:29:31pm
  சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையத்தில் சேவல் சண்டை நடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்த சேலம் பகுதியைச் சேர்ந்த விமல், ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த கிஷோர் குமார்  கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் கான்ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 560 கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via