தொடர் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் பரவலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத்தொடர்ந்து ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் அருகே வசிக்கும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags :