ஐந்தருவியில் 2 ஆண்டுகளுக்குப்பின்னர் படகு போக்குவரத்து தொடக்கம் -சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

by Editor / 10-07-2022 03:36:52pm
ஐந்தருவியில் 2 ஆண்டுகளுக்குப்பின்னர் படகு போக்குவரத்து தொடக்கம் -சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் சீசன் காலம் ஆகும் இந்த காலங்களில் குளிப்பதற்கு சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது கடந்த 2 ஆண்டு காலமாககொரோனா தொற்றின் காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இடையிடையே தடை இருந்துவந்தது.வந்தன இந்த ஆண்டு முழுமையாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அரசு அனுமதி அளித்தது இப்பொழுது சீசன் காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக குற்றாலம் ஐந்தறைவி  சாலையில் உள்ள வெண்ணமடை  குளத்தில் படகு போக்குவரத்து இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று  காரணத்தால் படகு போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்து வந்தது தற்போது இன்று சுற்றுலாத்துறை சார்பில் படகு போக்குவரத்து தொடங்கியது இரு நபர் மிதி படகு 4 நபர் மிதி படகு,4 நபர் துடுப்பு  படகு, தனிநபர் படகு என 32 விதமான படகுகள்  இயக்கப்பட்டு வருகின்றன, இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் படகு குழாமில் படகு போக்குவரத்து தொடங்கியது தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு போக்குவரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

 

Tags :

Share via