ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.7 கோடி மோசடி பெண் உள்பட 3 பேர் கைது

by Editor / 30-07-2022 02:11:56pm
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.7 கோடி மோசடி பெண் உள்பட 3 பேர் கைது

கரூரில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 45 நபர்களிடம் 2 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தான்தோன்றிமலை கருப்பண்ணன் ரமேஷ் ரங்கநாதன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆனந்தி  ஆகியோரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேர்ந்த 45 பேரிடம் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். ஆனால் சொன்னபடி அவர்கள் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை இதற்கிடையில் ரங்கநாதன் கொரோனவல்  உயிரிழந்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில்  தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆனந்தி  உள்பட 3 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories