கல்லூரி தோழிகளின் செல் நம்பரையம்,புகைப்படத்தையும் ஆண்களுக்கு அனுப்பிய மாணவி.

by Editor / 19-08-2022 09:14:25pm
கல்லூரி தோழிகளின் செல் நம்பரையம்,புகைப்படத்தையும் ஆண்களுக்கு அனுப்பிய மாணவி.


உடுமலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 2 பேரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து கல்லூரியில் நடந்த விசாரணையிழும்,காவல்துறையினர் நடத்திய விசாரணையிலும்  அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக உடன் படிக்கும் தோழிகளை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகவும் அந்த மாணவிக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளதாகவும்,முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த மாணவி தனது தோழிகள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் வைக்கும் புகைப்படங்களையும் செல்போன் நம்பரையும் மர்மநபர்களுக்கு அனுப்பியதாகவும்,அதனைதொடர்ந்தே  மாணவிகள் 2 பேரை அந்த ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளதுடன் விலையும் பேசியுள்ளனர். இதற்காக ஆண் நண்பர்களிடம் முன்கூட்டியே பணமும் பெற்று அந்த மாணவி இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த மாணவிக்கு விபச்சார கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா  என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories