தகுந்த நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன்

by Staff / 15-09-2022 12:43:31pm
தகுந்த நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன்

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அருளானந்த நகரிலுள்ள இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணாவின் கொள்கையை வாயளவில் பேசிக்கொண்டு இருக்காமல், செயல்படுத்தி காட்டியவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.

அண்ணா, புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் வழியில் நாங்கள் சென்று கொண்டியிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுவோம். அதிமுகவில் நிச்சயம் ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும், தகுந்த நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன்" என தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo