ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்

by Editor / 19-09-2022 11:06:41pm
 ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல்நிலை பாதிக்கப்பட்டு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 13-ம் தேதி, இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று ராணியின் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

அரசு மற்றும் அரச வழக்கப்படி ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடனும், அரசு மரியாதைகளுடன் ராணி எலிசபெத்தின் உடல் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேல் புகழ் பெற்ற கோகினூர் வைரம் மற்றும் செங்கோல் வைக்கப்பட்டும் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்னர் அங்குள்ள தேவாலயத்திற்கு ராணியின் உடல் எடுத்து சென்று வைக்கப்பட்டது. அங்கு எலிசபெத் உடலுக்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில், ராணியின் அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராணி உடலுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர்.

இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கினை இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பூங்காக்கள், சதுரங்கள் மற்றும் கதீட்ரல்களில் சடங்கு நிகழ்வுக்களை காட்சிபடுத்த தற்காலிகத் திரைகள் அமைக்கப்பட்டு இறுதி சடங்கு ஒளிபரப்பப்பட்டது. ராணியின் இறுதிச் சடங்கிற்காக அந்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via