இந்திய வான்வெளியில் ஈரானிய விமானம்.. பரபரப்பு

by Staff / 03-10-2022 04:10:23pm
இந்திய வான்வெளியில் ஈரானிய விமானம்.. பரபரப்பு

ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இந்திய வான்வெளி பரப்பு வழியாக சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே அந்த விமானத்தின் விமானிகள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இருப்பினும் பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான படை தளங்களில் இருந்து விமானப்படையின் Su-30MKI போர் விமானங்கள் ஈரானிய விமானத்தை கண்காணிக்க அனுப்பட்டன. அந்த ஈரானிய விமானம் சீனா நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியால் பரபரப்பு நிலவிவருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo