ஆஸ்திரேலியா2 காவல் அதிகாரிகளை கொன்றுவிட்டு ஏழு மாதமாக தப்பி ஒளிந்திருந்த குற்றவாளி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் உள்ள போரெபுன்க நகரில் 2 காவல் அதிகாரிகளை கொன்றுவிட்டு ஏழு மாதமாக தப்பி ஒளிந்திருந்த குற்றவாளி டெசி பிரிமேன் நேற்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். ஆஸ்திரேலியா விக்டோரியா காவல்துறையின் வரலாற்றிலே இது மிகப்பெரிய தேடுதல் வேட்டையாக அமைந்ததாகவும் இந்த ஆபரேஷன் சமிட் மூலம் இந்த குற்றவாளியை தீர்த்து கட்டி தேடுதல் வேட்டைக்கு ஒரு முடிவு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பண்ணை வீட்டில் சோதனை நடத்த சென்ற போது துப்பாக்கியால் சுட்டதில் துப்பறியும் உயர் அதிகாரி நீல் தாம்சன் மற்றும் வாடிம் வார்ட் கோட்டார் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தனர் கடந்த ஏழு மாதங்களாக அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருந்த இவரை பிடிக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன இவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலியா டாலர் சன்மானமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விக்டோரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள தலோகோ லாங் பகுதியில் உள்ள ஒருகொள்கலனில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று அவரோடு மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர் சரவணன் அடைய மறுத்ததனால் காவல்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தீய மனிதரை சுட்டுக் கொண்டதன் மூலம் உள்ளூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags :



















