கடகம் ராசி
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது மேன்மையே ஏற்படுத்தும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் உருவாகும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் அனுசரித்து நடப்பதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். வெளியூர் பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் புரிதலும் உண்டாகும்.
Tags :



















