மிதுனம் ராசி
இந்த வாரம் உயர் அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
வழிபாடு : குருமார்களை வழிபட இன்னல்கள் விலகும்.
Tags :