தனுசு ராசி
இந்த வாரம் உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், உங்கள் மீதான முக்கியத்துவமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல செயல்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தொழில் சார்ந்த உதவி சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு : விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.
Tags :