ஜி 20 தலைவர்களின்மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தும்

இந்தியாவை பொறுத்த வரை2023 இல் ஜி 20 உச்சிமாநாடு உலகளாவிய நன்மையை-வளர்ச்சியை-முன்னேற்றத்தைவெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுக்கிறது.2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 9,10 ஆம்தேதிகளில் ஜி 20 தலைவர்களின்மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் செவ்வாய் அன்று அதிகாரப்பூர்வமாகஅறிவித்தது. டிசம்பர்1,2022 முதல் நவம்பர் 30,2023 வரை ஒரு ஆண்டிற்கு ஜி 20 இந்தியா தலைமை பதவியை ஏற்றுக்கொண்ட பின்பு இந்தியா நாடு முழுவதும் 200 கூட்டங்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஜி 20மாநாட்டிற்கு எகிப்து,பங்களாதேஷ்,மொரிஷியஸ்,நெதர்லாந்து,நைஜிரியா,ஒமன்,சிங்கப்பூர்,,ஸ்பெயின்,ஐக்கிய அரபுநாடுகளை விருந்தினர்களாக அழைக்கும் .இதில்,சர்வதேச சூரிய மின்சக்தி,பேரழிவு தாங்கும் உள்கட்டமைக்கான கூட்டணி,ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை சர்வதேச சிறப்பு அழைப்பாளராக உள்ளன.

Tags :