ஸ்கேன் சென்டரில் கேடுகெட்ட வேலையை செய்த வாலிபர் கைது.

by Editor / 13-11-2022 09:21:29am
ஸ்கேன் சென்டரில் கேடுகெட்ட வேலையை செய்த வாலிபர் கைது.

 கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அபிதா பெண் ஒருவர், தன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கிறார் .ம ருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கச் சொன்னதால், ஸ்கேன் செண்டருக்கு சென்றிருக்கிறார். அங்கே ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்ற சென்றார். ஸ்கேன் சென்டரில் உடை மாற்றும் போது அந்த அறையில் ரகசியமாக செல்போன் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த போனை பார்த்தபோது, பல பெண்களின் உடை மாற்றும் வீடியோ இருப்பது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து அப்பெண் போலீசிடம் புகார் அளித்தார். ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்த அன்ஜித் என்கிற இளைஞர் தான் இந்த வேலையை செய்தது தெரியவந்தது. பின்பு அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via