மனைவிக்காக 19பெண்களை ஏமாற்றிய ஹீரோ கைது.

by Editor / 26-12-2022 06:34:13am
மனைவிக்காக 19பெண்களை ஏமாற்றிய ஹீரோ கைது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே பள்ளம் பட்டியை சேர்ந்தவர் ஜான்சி ராணி. தனது கணவர் இறந்து விட்டதால் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது ஜான்சிராணி உடன் அறிமுகமாகி இருக்கிறார் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா. தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதாக கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி காதலித்துள்ளனர். பின்னர் தனக்கு பண தேவை இருப்பதாக கூறிய கார்த்திக் ராஜா, தாயாரின் தாலி செயினை கொடுத்து, ஜான்சி ராணியிடம் இருந்த அவரின் நகையை வாங்கிவிட்டு மாயமானார்.

இந்த நிலையில் ஜான்சி ராணி அந்தநகையை பரிசோதித்துப்பார்த்தபோது கார்த்திக் ராஜா கொடுத்தது போலி நகை என்பது தெரிய வந்தது . இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் ராஜா மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரில் போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுவரை அவர் 19 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து சுமார் 80பவுன் நகையை மோசடி செய்துள்ளார். பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories