செந்தில் பாலாஜி வழக்கு - ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த விவகாரத்தில், வழக்கை நடத்துவதற்கு தமிழக அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் உள்பட சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :