போலி கௌரவ டாக்டர் பட்டம் விவகாரம்:ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு.

by Editor / 03-03-2023 06:57:13am
போலி கௌரவ டாக்டர் பட்டம் விவகாரம்:ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த ஞாயிறன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு,நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட50 க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத நிலையில்,அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வடிவேலுவின் வீட்டிற்கே சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர்.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், அன்று வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஸ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்பு ஏற்கனவே இதுபோன்று அதிக நிகழ்வுகளை நடத்தியது குறித்தும் விசாரணை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via