நாமக்கல் சிறுமி மித்ராவின் மருந்துக்கு வரிவிலக்கு

by Editor / 14-07-2021 06:19:30pm
நாமக்கல் சிறுமி மித்ராவின் மருந்துக்கு வரிவிலக்கு

 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் - பிரியதர்ஷினியின் 2 வயது மகள் மித்ரா. அரியவகை முதுகெலும்பு தசை செயலிழப்பு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.


இவரது மேல் சிகிச்சைக்காக ஜல்ஜென்மா என்ற மருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்விலை இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்ந்து ரூ.16 கோடி ஆகும் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்குத் தேவையான நிதியை பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களின் மூலம் அறிந்து நன்கொடையாகத் தந்து வந்தனர்.இருப்பினும், உரிய அந்தத்தொகை முழுமையாக எட்டப்படவில்லை.


 இதனால் ஏற்படும் காலதாமதம், குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஒன்றிய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு குழந்தை மித்ராவுக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் மருந்துக்கு மட்டுமாவது ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.ரூ.6 கோடி வரியை ரத்து செய்த ஒன்றிய அரசுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கூட, மித்ராவுக்குத் தேவையான மருந்து மீதான வரியை ரத்து செய்யக் கோரியிருந்தார்.


பல்வேறு தரப்பினரின் இக்கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு மித்ராவுக்கு வாங்கப்படும் மருந்து மீதான இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டியை ரத்து செய்துள்ளது. இதன்மூலம், மொத்தத்தொகையான ரூ. 16 கோடியிலிருந்து ரூ.6 கோடி வரை குறையும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via